உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.53 கோடியாக அதிகரித்துள்ளதால் உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சற்றுமுன் வெளியான உலக சுகாதார மையத்தின் தகவலின்படி உலக அளவில் இதுவரை 1,53,73,614 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் உலக அளவில் 93,49,192 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் என்றும், 630,193 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் இதுவரை 4,100,875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு 146,183 பேர் பலியாகியுள்ளனர் என்பதும், 9,349,192 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 2,231,871 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் 789,190 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தென்னாப்பிரிக்காவில் 394,948 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெருவில் 366,550 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மெக்சிகோவில் 362,274 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிலி நாட்டில் 336,402 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பெயினில் 314,631 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.