மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த 10 போலி டாக்டர்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் அதிகம் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஒரே நாளில் பத்து மருத்துவர்கள் மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து 10 போலி டாக்டர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்தனர். மருத்துவம் படிக்காமல் உரிய மருத்துவ லைசென்ஸ் இல்லாமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பது சட்டப்படி குற்றம் என்றும் அவ்வாறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்
மேலும் இதுபோன்ற போலி மருத்துவர்களை பார்த்தால் போலீசாரிடம் உடனடியாக பொதுமக்கள் தகவல் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.