Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

எங்கள் 13 வயது சிறுமி கர்ப்பமாக இருக்கிறாள்… காரணம் 10 வயது சிறுவன் – அதிர வைத்த பெற்றோர் !

எங்கள் 13 வயது சிறுமி கர்ப்பமாக இருக்கிறாள்… காரணம் 10 வயது சிறுவன் – அதிர வைத்த பெற்றோர் !
, வெள்ளி, 24 ஜனவரி 2020 (07:16 IST)
தங்கள் 13 வயது பெண் குழந்தையை 10 வயது சிறுவன் ஒருவன் கர்ப்பமாக்கியதாக ரஷ்யாவைச் சேர்ந்த பெற்றோர் ஒருவர் கூறியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பெற்றோர் தங்களது 13 வயது சிறுமி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்குக் காரணம் ஒரு 10 வயது சிறுவன் எனக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். இதையடுத்து 10 வயது சிறுவனால் ஒரு பெண்ணை கர்ப்பமாக்க முடியாதே என அனைவரும் சொல்ல மருத்துவர்களும் அதையே ஆமோதித்தனர்.

இதையடுத்து அந்த சிறுவனுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முடிவில் அந்த சிறுவனுக்கு உடல்ரீதியாக எந்த  தகுதிகளும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்த சிறுமியும் அவரது பெற்றொரும் சிறுவன்தான் கர்ப்பத்துக்குக் காரணம் என விடாப்பிடியாகக் கூறினர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என அச்சிறுவனின் பெற்றோர் கூறியுள்ளனர். ஆனாலும் சிறுமியின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்ற விலகாத மர்மம் ஒன்று இன்னும் அப்படியே இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் திமுக: கஸ்தூரியின் ஃபேஸ்புக் பதிவு!