பூமியில் ஏழு கண்டங்கள் உள்ளன. இதில் ஐரோப்பா கண்டத்தில் டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய குளிர் மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாகக் காணப்படும்.
தற்போது ஆஸ்திரியா நாட்டிலும் கடுமையான பனிபொழிவு ஏற்பட்டுள்ளதால் சாலை முழுவதும் பனிகளே காட்சியளிக்கின்றன. பருவநிலை மாற்றத்தால் உறைபனி நிலவுகிறது.
இந்நிலையில் இஸ்க்ஜல் என்ற இடத்திற்கு சுற்றுலா சென்ற இங்கிலாந்து நாட்டுக்காரரின் வாகனமொன்று 13 அடி உயரத்தில் பாறைபோல் குவிந்திருந்த சாலையில் ஆமைபோல் மெதுவாக நகர்ந்து நகர்ந்து சென்றது.
இதை அங்குள்ள மக்கள் ஆச்சர்யமாக பார்த்தனர்.