சவுதி அரேபியாவில் கடும் வெப்ப அலை வீசி வருவதை அடுத்து ஹஜ் பயணம் செய்த 19 பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பேரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் இருக்கும் இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் செய்து வரும் நிலையில் இந்த வருடமும் லட்சக்கணக்கான ஹஜ் புனித பயணம் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சவுதி அரேபியாவில் கடும் வெப்ப அலை காரணமாக ஹஜ் புனித பயணம் செய்த ஜோர்டானை சேர்ந்த 14 பேர், ஈரானை சேர்ந்த ஐந்து பேர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
மேலும் ஹஜ் புனித பயணம் வந்துள்ள 2767 பேர் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு அந்நாட்டு சுகாதாரத்துறை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் அபாய கட்டத்தில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனை அடுத்து ஹஜ் பயணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.