சவுதி அரேபியாவில் சமூக வலைதளத்தில் அரசை விமர்சித்து சமூக அமைதியை சீர்கெடுக்கும் வகையில் கருத்து தெரிவித்தால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சவிதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பல்வேறு சமூக சீர் திர்த்தங்களை கொண்டு வந்திருக்கிறார். இருந்தாலும் இவர் விதித்திருக்கும் பல தடைகளால் பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகி வருகின்றனர்.
அந்த வகையில் சமூக வலைதளங்களில் அரசை கேலி, கிண்டல்கள் செய்து அதன் மூலம் பொது அமைதி, மத உணர்வுகளுக்கு இடையூறு செய்தால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் 3 மில்லியன் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 கோடியே 60 லட்சம்) அபராதமும் விதிக்கப்படும் என முகமது பின் சல்மான் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.