பிலிப்பைன்ஸில் கடந்த 29 ஆம் தேதி காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.0 எனப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 50 பேர் வரை இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோ தீவில், டாவோ நகரை மையமமாகக் கொண்டு இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் ஆழம் 59 கி.மீ எனக் கண்டறியப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.0 ஆக பதிவாகி இருந்தது. இந்தப் பூகம்பத்தால், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.
மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்ந்த பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப்பெறப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஆங்காங்கே நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவை ஏற்பட்டன. இவற்றில் சிக்கி இதுவரை 50 பேர் வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர்தான் பிலிப்பைன்ஸின் அண்டை நாடான இந்தோனேஷியாவில் சுனாமி அடித்து 450 பேர் வரை பலியான துயரச் சம்பவம் நடந்தது.