சிங்கப்பூரில் பட்டாசு வெடித்த தமிழருக்கு இந்திய மதிப்பில் 15 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த அக்டோபர் மாதம் தீபாவளியன்று லிட்டில் இந்தியா என்ற பகுதியில் வசித்து வரும் தமிழரான சீனிவாசன் சுப்பையா முருகன் என்பவர் பொது இடத்தில் பட்டாசுகளை வெடித்துள்ளார். சிங்கப்பூரில் பொது இடங்களில் பட்டாசுகள் வெடிப்பது தடை செய்யப்பட்ட ஒன்று.
இந்நிலையில் சீனிவாசன் சுப்பையா மீது தொடுக்கப்பட்ட வழக்கு மீது நடத்தப்பட்ட விசாரணையில் சீனிவாசன் சுப்பையா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதில் சீனிவாசன் சுப்பையாவுக்கு 3 ஆயிரம் சிங்கப்பூர் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 15 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.