ஆப்கானிஸ்தானில் 2018 முதல் 2020 வரை அமைச்சராக இருந்த சயீத் அஹமது ஷா தத் இப்போது ஜெர்மனியில் பீட்ஸா டெலிவரி செய்பவராக உள்ளார்.
தாலிபன்களுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, அமெரிக்கா ஆகஸ்ட் 31 க்குள் தனது படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் இன்னும் அவர்கள் சொன்ன அளவுக்கான மக்களை இன்னும் வெளியேற்றவில்லை. இதனால் அமெரிக்க படைகள் வெளியேறுவதில் கால நீட்டிப்பு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதை முற்றிலும் மறுத்துள்ளார். இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் 2018 -2020 தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த சயீத் அஹ்மத் ஷா சாதத் என்பவர் இப்போது ஜெர்மனியில் பீட்ஸா டெலிவரி செய்யும் ஊழியராக வேலை செய்து வருகிறாராம். இது சம்மந்தமாக அல் ஜஸிரா செய்தி வெளியிட்டுள்ளது. இவர் 2020 அம் ஆண்டே அதிபர் அஷ்ரப் கனியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.