அமெரிக்காவில் உள்ள ஃபிலடெல்பியா என்ற பகுதியில் 20 வயது வாலிபர் ஒருவர் கொலை செய்ததாக சிறையில் தள்ளப்பட்ட 28 ஆண்டுகள் கழித்து தற்போது 48வது வயதில் அவர் நிரபராதி என்று தெரிய வந்ததை அடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்
அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தை சேர்ந்த ஃபிலடெல்பியா என்ற பகுதியை சேர்ந்தவர் வில்சன். இவர் கடந்த 1989ஆம் ஆண்டு மூன்று பேரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இதுகுறித்து நடைபெற்று வந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு 1992ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்
இந்த நிலையில் 28 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்த நிலையில் தற்போது அந்த மூன்று கொலைகளை செய்தது வில்சன் அல்ல என்பது தெரியவந்து உள்ளது. இதனை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் 28 ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து விடுதலையான தனது மகனை பார்த்து அவரது தாயார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார் இருப்பினும் தனது மகனின் 28 ஆண்டுகால வாழ்க்கை வீணாக போய் விட்டதே இதற்கு தகுந்த நிவாரணம் அளிக்க வேண்டும் என்று அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்
அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு, வில்சனுக்கு கோடிக்கணக்கில் நிவாரணத்தொகை அளிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 28 ஆண்டுகள் கழித்து கொலையாளியை அல்ல என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பிறகு அவரது குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்