Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

விவாகரத்து செய்தார் கணவரை - உலகின் முதல் பணக்காரப் பெண்ணானார்

விவாகரத்து செய்தார் கணவரை - உலகின் முதல் பணக்காரப் பெண்ணானார்
, திங்கள், 14 ஜனவரி 2019 (15:08 IST)
அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸை விவாகரத்து செய்வதின் மூலம் உலகின் முதல் பணக்காரப் பெண்ணாகிறா அவரது மனைவி மக்கின்சி டட்டில்.

அமேசான் நிறிவனம் உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனம் அமெரிக்காவில் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமேசான் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் பிரபல நாவலாசிரியை மக்கன்சி டட்டிலை, ஜெஃப் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் சில ஆண்டுகளில் ஜெப் பிசோஸின் அமேசான் நிறுவனத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் செல்ல உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக வளர்ந்தது. இந்த அசுர வளர்ச்சியில் ஜெப் பிசோவின் காதல் மனைவி மக்கன்ஸியின் பங்கும் இன்றியமையாதது.

இன்றைய நிலவரப்படி அமேசான் நிறுவனத்தின் 16 சதவீத பங்குகளை ஜெப் தன் கைவசம் உள்ளார். இந்த பங்குகளின் மதிப்பு 136 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்நிலையில் ஜெப் பிசோவும் மக்கன்சியும் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். இப்போது இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

இதனால் அவர்கள் இருவரின் 25 ஆண்டுகால மணவாழ்க்கை முடிவுக்கு வருகிறது. அமெரிக்க விவகாரத்து சட்டத்தின் படி கணவன் மனைவி இருவரும் பிரியும் போது சொத்தில் பாதியை மனைவிக்குத் தர வேண்டும். அதன்படிப் பார்த்தால் ஜெப் பிசோவின் அமேசான் பங்குகளில் பாதியான 8 சதவீதப் பங்குகள் மக்கன்ஸிக்கு செல்ல இருக்கிறது. இந்த விவாகரத்தின் 68 பில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரியாக , நம்பர் 1 பெண் பணக்காரராக உயர்ந்துள்ளார் மக்கன்சி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மண்டை ஓடுகள், மனித மாமிசம் - அகோரிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்?