Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

15 கோடி பேர் வரை பாதிப்படையும் அபாயம்: ஸ்தம்பித்தது அமெரிக்கா!

15 கோடி பேர் வரை பாதிப்படையும் அபாயம்: ஸ்தம்பித்தது அமெரிக்கா!
, வெள்ளி, 13 மார்ச் 2020 (12:32 IST)
அமெரிக்காவில் சுமார் 46% மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்பிபிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,627லிருந்து 4,972 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,139லிருந்து 1,34,559 ஆக அதிகரித்துள்ளது. 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தோரில் 68,939 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பரவத் தொடங்கிய சீனாவில் நோய் பாதிப்பு காரணமாக நேற்று ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். ஆனால், சீனாவிற்கு வெளியே கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, குறிப்பாக இத்தாலியில் 1,016 ஆக அதிகரித்துள்ளது. 
 
இந்நிலையில், அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை சுமார் 33 கோடியாகும். இதில் 7 கோடி பேர் முதல் 15 கோடி பேர் வரை கொரானா வைரசால் பாதிக்கப்படும் நிலை இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 46%  மக்கள் பாதிக்கப்பட வாய்பிபிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அமெரிக்காவின் பெருவாரியான நகரங்கள் ஸ்தம்பித்துள்ளதாக தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னடா கோழிக்கறிக்கு வந்த சோதனை! ஓசியில் கொடுத்தாலும் மறுக்கும் மக்கள்!