கனடா நாட்டிலுள்ள இந்துக் கோவில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளி நாடுகளில் இந்தியர்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்கள் வழிபாட்டிற்காக கோவில்கள் உருவாக்கப்பட்டன.
இது இந்தியர்களுக்கு மட்டுமின்றி அந்த நாட்டிலுள்ள மக்களுக்கும் வழிபாட்டிற்கு உகந்ததாகவும் இருந்து வருகிறது.
அந்த வகையில், சமீபத்தில், நியூசிலாந்தில் உள்ள இந்துக் கோவில்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில், கனடாவில் பிராம்டனிலுள்ள கவுரி சங்கர் மந்திர் என்ற இந்துக் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய பாரம்பரிய சின்னமான விளங்கும் இந்தக் கோவில் மீதான தாக்குதலுக்கு இந்திய துணைத்தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது,
காளிஸ்தான் ஆதரவாளர்கள் இந்த்தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.