ட்விட்டர் என்று கூறப்படும் X தளத்தில் இனி ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தொலை தொடர்பு நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யலாம் என்பதும் இதில் கால் செய்வதற்கு எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பதும் இன்டர்நெட் வசதி இருந்தால் மட்டுமே போதும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது வாட்ஸ் அப் போலவே X தளத்திலும் ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளதை அடுத்து பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எனவே இனி ட்விட்டர் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கோடிக்கணக்கில் தொலைத்தொடர்பு துறையில் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.