கொரோனா தொற்று உருவானது எப்படி என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள உளவு அமைப்புகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக இந்த கொரோனா வைரஸ் சீனா தான் உருவாக்கியது என கூறப்பட்டு இதன் மீதான விவாதங்கள் நடைப்பெற்று வந்தது. இது தொடர்பான ரகசிய ஆவணங்கள் அமெரிக்க வெளியுறவுத் துறைக்குக் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இது சீனாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து, கொரோனா வைரஸ் பரவியது குறித்து உலக சுகாதார நிறுவனம் அடுத்த கட்ட விசாரணையை தொடங்க உள்ள நிலையில், கொரோனா சீனாவில் இருந்து பரவியது குறித்த விசாரணையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் தீவிரப்படுத்தும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜோ பைடன் 90 நாட்களில் கொரோனா வைரஸ் உருவானது எவ்வாறு என்பது குறித்த அறிக்கையை உளவு அமைப்புகளுக்கு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.