எத்தியோப்பியாவில் பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டுவெடிப்பு நடைபெற்றதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் எத்தியோப்பியா நாட்டின் பிரதமராக அபிய் அஹமத் பிரதமராக பதவியேற்றார்.
இந்நிலையில் தலைநகர் அடிஸ் அபாபாவில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் அபி அகமது, ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். உரையை முடித்துக் கொண்டு மக்களை நோக்கி கையசைத்தபடி மேடையில் இருந்து கீழே இறங்கினார்.
அப்போது பயங்கர சப்தத்துடன் கையெறி குண்டு வெடித்தது. இதனால் பதற்றமடைந்த மக்கள் உயிர் பயத்தில் சிதறி ஓடினர். அதிர்ஷ்டவசமாக பிரதமர் இந்த விபத்தில் உயிர் தப்பினார்.
இருந்தபோதிலும் இந்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 150க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.