2022 ஆம் ஆண்டு வரை பூஸ்டர் தடுப்பூசிகள் போடும் திட்டத்தை பணக்கார நாடுகள் தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தகவல்.
உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், உலகளவில் உற்பத்தியாகும் மொத்த தடுப்பூசியில் 80% அளவிற்கு பணக்கார நாடுகளுக்கே செல்கிறது என வேதனை தெரிவித்துள்ளார். அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் 2 டோசும் மக்களுக்கு போட கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரை பூஸ்டர் டோஸ் பற்றி விவாதிக்கவே இல்லை.
அனைவருக்கும் முழுமையாக கொரோனா தடுப்பூசி என்ற முதன்மையான நோக்கம் நிறைவேறிய பின்னர் தான் பூஸ்டர் டோஸ் பற்றி கவனத்தில் கொள்ளப்படும். 2022 ஆம் ஆண்டு வரை பூஸ்டர் தடுப்பூசிகள் போடும் திட்டத்தை பணக்கார நாடுகள் தவிர்க்க வேண்டும். உலகின் பல ஏழை நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி சென்று சேரவில்லை.