கொரொனாவால் ஒரு பக்கம் மக்கள் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இன்னொரு பக்கம் மக்களுக்கு வேலையிழப்பு. பள்ளிகள் மூடல்; பொருளாதாரம் பாதிப்பு என எத்தனையோ இன்னல்கள் இருந்தாலும் இன்னொரு பக்கம் நிறுவனத்தையும் முதல்போட்ட தொழிலையும் நடத்தியே ஆக வேண்டிய இந்த நெருக்கடியிலும் மக்களைக் கவரும் யுக்திகளை கையாளத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் ஹூண்டா கார் விற்பனையகம் உள்ளது. இங்கு சாண்டா ஃபீ (santa fe ) என்ற சொகுசுக் காரின் விலை ரூ. 38 லட்சம் ஆகும். வாடிக்கையாளர்கள் இந்தக் காரை வாங்கினால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள reina sedan என்ற கார் இலவசமாகக் கிடைக்கும் எனவும் , அதில்லையென்றால் வாங்கும் காரை பொருத்து அதன் ஆஃபர் ரூ 12 லட்சத்திற்கு மேல் விலையுள்ள ஒரு கார் ஆஃபரில் கிடைக்கும் என அறிவித்துள்ளது. இந்த காரை வாங்க பிலிப்பைன்ஸ் தான் போகவேண்டும், ஆனால் இந்தக் கொரோனா முடிந்து அங்கு செல்வதற்குள் இதே ஆஃபர் இருக்குமா என்று சொல்ல முடியாது.
இந்த ஆஃபர் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்மூரில் இப்படி ஆஃபர் வந்தால் ஒரு நாளில் அனைத்து கார்களும் விற்பனை ஆகிடும் தானே!