பாகிஸ்தான் நாடு திவால் ஆகும் நிலையில் இருப்பதை அடுத்து சீனா 700 மில்லியன் டாலர் கடன் கொடுத்து உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் நாடு கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது என்பதும் உணவு எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை நோக்கி உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான திணறி வரும் நிலையில் கையிருப்பு டாலர்களும் குறைந்து வருவதால் பாகிஸ்தான் திவால் நிலையை எட்டிவிட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தானை நெருக்கடியில் இருந்து மீட்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கோரப்பட்டிருந்த நிலையில் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒரு சில விதிகளை விதித்துள்ளது. இந்த விதிகளை பின்பற்றினால் மட்டுமே பாகிஸ்தானுக்கு கடன் வழங்க முடியும் என சர்வதேச நாண நிதியம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு கடன் வழங்க சீனா முன்வந்துள்ளதாகவும் 700 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை முதல் கட்டமாக சீனாவுக்கு வழங்க இருப்பதாகவும் இதற்கு சீன அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் கடனாக வழங்கும் இந்த பணம் பாகிஸ்தான் மத்திய வங்கியில் செலுத்தப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சீனாவின் இந்த நிதி உதவி பாகிஸ்தானுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் என்றாலும் திவால் நிலையிலிருந்து காப்பாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.