கொரோனா வைரஸ் பரவல் குறித்து சர்ச்சைக்குள்ளான வூகான் ஆய்வகத்திற்கு சீனா நோபல் பரிசு கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல கோடி மக்களை பாதித்துள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது இல்லை என்றும், வூகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் சர்ச்சைக்கு உள்ளான வூகான் ஆய்வகத்திற்கு கொரோனா குறித்த ஆய்வுகளை மேற்கொண்டதற்காக நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய ஆய்வகத்திற்கு சீனா நோபல் பரிசு கேட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.