இந்தியாவுக்கு சொந்தமான ஆளில்லா சிறிய விமானம் ஒன்று சீன நாட்டு எல்லைக்குள் சமீபத்தில் ஊடுருவியதாகவும், பின்னர் அது பிரச்சினைக்குரிய சிக்கிம் பகுதியில் நொறுங்கி விழுந்ததாகவும் சீனா குற்றம்சாட்டியது.
இந்த குற்றச்சாட்டு குறித்து இந்திய ராணுவ அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது. இந்தியாவின் ஆளில்லா விமானம், இந்திய பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது.
சிக்கிம் செக்டாரில் உள்ள அசல் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சென்றுவிட்டது. வழக்கமான நடைமுறைப்படி, இதுபற்றி இந்திய எல்லை பாதுகாப்பு படையினர், சீனாவுக்கு தெரியப்படுத்தி, அதை கண்டறியுமாறு கூறினர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சீன அரசு இந்தியா ஆளில்லா விமான ஊடுருவலுக்கு மன்னிப்புக் கோர வேண்டும் இல்லையென்றால் ஆளில்லா விமானத்தை இழந்ததை விட மோசமா விளைவுகளை இந்தியா சந்திக்கும் என கூறி உள்ளது.