உலக அளவிலான மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் சீனாவில் அதிகமான முதியவர்களே உள்ளது சீனாவை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முழுவதும் அதிகமான மக்கள் தொகை கொண்டு நாடுகளில் முதலிடத்தில் சீனாவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும் உள்ளது. சீனாவின் தற்போதைய மக்கள் தொகை 141 கோடியாக உள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடந்த 2016ம் ஆண்டு சீனா குடும்பத்திற்கு ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் போன்ற சட்டங்களை கொண்டு வந்தது.
இதனால் மக்கள் தொகை குறைந்தாலும் கூட இளைஞர்கள், குழந்தைகள் எண்ணிக்கையை விட முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் அதிகம் தேவை என்பதால் வீட்டிற்கு ஒரு குழந்தை திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையிலும் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது சீனாவை கவலையில் ஆழ்த்தியுள்ளதாம்.