சீனாவில் பிரபல காமெடி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ. 16 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பிரதமர் ஜி ஜின்பிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தலைநகர் பீஜிங்கில் சியாகுவோ என்ற காமெடி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் லீ ஹாவ்ஷி பங்கேற்று நடித்தார். அப்போது, அவர் சீன ராணுவம் பற்றி அவதூறு பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து எழுந்த புகார் எழுந்த நிலையில், இந்த காமெடி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சியாகுவோ நிறுவனத்திற்கு ரூ.16 கோடி அபராதம் விதித்து அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகர் ஹாவ்ஷி தன் அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறுத்துவதாக தன் சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சியாகுவோ நிறுவனம், அவரை நீக்கம் செய்துள்ளதாக கூறியுள்ளது.