தாய்லாந்தில் கஞ்சா இலைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பீட்சாவிற்கு மக்களிடையே வரவேற்பு எழுந்துள்ளது.
உலகம் முழுவதும் உணவு வகைகளுக்கு ஒரு பெரும் மார்க்கெட் நிலவி வருகிறது. குறிப்பாக உணௌ ரிவீவ் செய்யும் யூட்யூப் சேனல்கள் வருகைக்கு பிறகு உலக நாடுகள் முழுவதும் பல விதமான உணவுகள் பிரபலமாக தொடங்கின. இந்நிலையில் கொரோனா அதை தொடர்ந்த ஊரடங்கு போன்ற காரணங்களால் பல நாடுகளில் உணவகங்கள் பெரும் சரிவை சந்தித்துள்ளன.
இந்தோனேசியாவிலும் உணகங்கள் பெரும் லாபமில்லாமல் செயல்பட்டு வரும் நிலையில் புதிய வகை உணவுகளை தயாரித்து மக்களிடையே உணவு ஆர்வத்தை தூண்ட முயன்று வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தோனேசியாவில் கஞ்சா இலையை பயன்படுத்தி செய்யப்படும் க்ரேஸி ஹாப்பி பீட்சா ட்ரெண்டாகியுள்ளது. இந்தோனேசிய டோம் யும் கய் சூப்பில் பயன்படுத்தப்படும் பொருட்களை கொண்டே இந்த பீட்சா தயாரிக்கப்படுகிறது. இறுதியாக வறுக்கப்பட்ட முழு மரியுவனா இலை அதில் சேர்க்கப்படுகிறது. இந்த வகை பீட்சாவை வாங்கி உண்ண மக்கள் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.