உலகெங்கும் உள்ள பொழுது போக்கு அம்சங்களில் சமூக வலைதளத்திற்கு என்றுமே தனி இடம் உண்டு. அதிலும் குறிப்பாக டுவிட்டருக்கு ஏராளமான பயனாளர்கள் இருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கும் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரையிலான நட்சத்திரங்களின் செல்வாக்கு கூட அவர்களுக்கு டுவிட்டரில் உள்ள பாலோயர்ஸை வைத்துதான் கணக்கிடப்படுகிறது.
இந்நிலையில் இதன் நிர்வாக இயக்குநர் ஜாக் டோர்ரே, தற்போது டுவிட்டரில் சில மாற்றங்களை கொணர யோசித்து வருகிறார் என தக்வல் வெளியாகிறது.
அதில் குறிப்பாக டுவிட்டரில் எடிட் செய்யும் வசதிக்குப் பதிலாக கிளாரிஃபை ஆப்ஷனை கொண்டு வருவது பற்றி தீவிரமாக கலந்தாலோசித்து வருகிறார்.
சாதாரண மக்கள் கூட தம் எண்ணங்களை பதிவிடும் சமூக வலைதளமாக அனைவராலும் டுவிட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது உள்ள டுவிட்டரில் ஒரு டுவிட் செய்தால் அதை எடிட் செய்ய முடியாது. அதை டெலிட் மட்டுமே செய்ய முடியும்.
ஆனால் பேஸ்புக் . இன்ஸ்டாகிராமில் எடிட் செய்யும் வசதி இருப்பது போல டுவிட்டரில் கொண்டு வர பலரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் டுவிட்டரின் நிர்வாக இயக்குநர் ஜாக் டோர்ரே இதற்கு இன்னும் ஓகே தெரிவிக்கவில்லை. இருந்தாலும் அவர் இதைப் பற்றி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகின்றன.