உலக மருத்துவ அமைப்புகள் காசா மக்களுக்கு உதவ வேண்டும் என ஹமாஸ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த 2 மாத காலத்திற்கும் மேலாக காசா பகுதியில் போர் நடந்து வருகிறது. காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி, தரை வழி தாக்குதல்களை நடத்தி வருவதால் இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 50 ஆயிரம் பேர் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போதிய மருந்துகள், மருத்துவ வசதிகள் இல்லாததால் பாலஸ்தீன மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் உலக மருத்துவ அமைப்புகள் காசா மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும் என ஹமாஸ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இடையே ஒரு வாரக்காலம் போர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் போர் நடந்து வருகிறது.