அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் டுவிட்டர் பக்கம் தடை நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் அவர் ட்விட்டர் மீண்டும் வர மாட்டேன் என தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க், 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் என்பதும் அதனை அடுத்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று காலை வெளியான செய்தியின் படி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ட்விட்டர் பக்கம் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் அவருடைய ட்விட்டர் பக்கம் மீண்டும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது
ஆனால் இந்த அறிவிப்பை அடுத்து மீண்டும் டுவிட்டர் பக்கம் வர போவதில்லை என்று டொனால்டு தெரிவித்துள்ளார். தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் ஸ்பெஷல் என்ற சமூக வலைதளத்தில் மட்டுமே செயல்படுவேன் என்று அவர் தெரிவித்திருந்தார்
இதனால் அவரது டுவிட்டர் பக்கம் தடை நீக்கம் செய்யப்பட்டு இருந்த நிலையிலும் அவர் வரமாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.