சவுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நடந்த தாக்குதலுக்கு ஏமன் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
சவுதி அரேபியாவில் உள்ள புக்கியாக் நகரில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது இன்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக சூழப்ப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல் நடத்தப்பட்ட ஆலைதான் உலகிலேயே மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை என்பது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு சுமார் 7 மில்லியன் லிட்டர் எண்ணெய் அங்கு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து குர்அய்ஸ் என்ற பகுதியில் உள்ள அரம்கோ நிறுவனத்தின் பெட்ரோல் கிணறு மீதும் ஆளில்லா விமானம் மூலம் இன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெட்ரோல் கிணற்றின் ஒருபகுதி தீப்பிடித்து எரிந்து, பின்னர் அணைக்கப்பட்டதாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் அண்டைநாடாக இருந்து பகைநாடாக மாறிய ஏமன் தரப்பில் இருந்து ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.