எகிப்து தொல்லியல் துறை சக்யுரா பகுதியில் இருந்து 59 சவப்பெட்டிகளை கண்டெடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
எகிப்தில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு இறந்தவர்களை துணியில் சுற்றி சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யும் முறை பின்பற்றப்பட்டு வந்தது. அவ்வாறு புதைக்கப்பட்டு தற்போது கண்டெடுக்கப்படும் சடலங்களை ஆராய்ச்சியாளர்கள் மம்மி என்றழைக்கின்றனர்.
சமீபத்தில் எகிப்து தொல்லியல் துறை சக்யுரா பகுதியில் இருந்து 59 சவப்பெட்டிகளை கண்டெடுத்துள்ளது. இவை சுமார் 2500 ஆண்டுகள் பழமையானவை என கூறப்படுகிறது. அவற்றில் ஒரு சவப்பெட்டியை தொல்லியல் ஆய்வாளர்கள் முன்னிலையில் திறந்தனர்.
அதில் பிரத்யேகமாக அடக்கம் செய்வதற்காகவே தயாரிக்கப்பட்ட துணியில் மம்மி ஒன்று சுற்றப்பட்டு இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இப்போது இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.