இலங்கையில் நடைபெற்று வரும் ஃபேஸ்புக் நிறுவனம் சிங்கள மொழி தெரிந்தவர்களை அதிகளவில் பணியில் சேர்த்து வருகிறது.
இலங்கையில் கடந்த மார்ச் மாதம் பௌத்தர்களுக்கும் இஸ்லாமியர்களும் இடையே வன்முறை பெரிய அளவில் ஏற்பட்டது. இதற்கு ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வார்த்தைகள்தான் முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
சிங்கள் மொழியில் பதிவிடப்பட்ட வார்த்தைகளை அடையாளம் கண்டு நீக்கவில்லை என்று ஒருவார காலம் தொலைத்தொடர்பு துறையால் ஃபேஸ்புக் முடக்கப்பட்டது. இதனால் நடந்த தவறை ஒப்புக்கொண்டு ஃபேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கேட்டது.
இந்நிலையில் இதுபோன்ற நிலை வருங்காலத்தில் ஏற்படாமல் இருக்க ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை சிங்கள மொழி கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிங்கள் மொழி தெரிந்தவர்களை அதிகளவில் பணியில் அமர்த்தப்பட்டு வருகிறார்கள்.