பேஸ்புக்கில் ஒரு செய்தியோ அல்லது லிங்க் வந்தால் அதன் தலைப்பை மட்டும் படித்துவிட்டு செய்தியை படிக்காமலேயே பகிரும் பழக்கம் பலருக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் பேஸ்புக்கில் தற்போது புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது
இதன்படி ஒரு செய்தி அல்லது லின்ங் அல்லது புகைப்படத்துடன் கூடிய செய்தியை படிக்காமல் பகிர முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கில் எந்த ஒரு செய்தி அல்லது லிங்க் வந்தால் அதை படிக்காமல் பகிர முயற்சித்தால் நீங்கள் இந்த செய்தியை படித்தவுடன் தான் பகிர முடியும் என்று ஒரு பாப் அப் செய்தி வரும். எனவே எந்த ஒரு செய்தியையும் உள்ளுக்குள் சென்று படித்துவிட்டு அதன் பின்னர்தான் பகிர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
இதன் மூலம் போலியான செய்திகள், வதந்திகள் பரவுவதை தடுக்க முடியும் என பேஸ்புக் முடிவு செய்துள்ளது. இந்த புதிய வசதியை தற்போது சோதனை முறையில் உள்ளதாகவும் விரைவில் பேஸ்புக் பயனாளர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வரும் பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பேஸ்புக்கின் இந்த புதிய வசதியை அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.