ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே வேலை என்ற சட்டத்தை பின்லாந்து பிரதமர் கொண்டு வந்திருப்பது அந்நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பின்லாந்து நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றவர் சன்னா மரின். 34 வயதே ஆன சன்னா மரின் உலகின் மிகவுன் இளம் பெண் பிரதமராக அறியப்படுகிறார். இவரது அமைச்சரவையில் உள்ள 19 உறுப்பினர்களில் 12 பேர் பெண்கள்தான். பதவியேற்ற காலம் முதலே பின்லாந்து நாட்டில் பல மாற்றங்களை செய்து வருகிறார் சன்னா.
அந்த வகையில் பின்லாந்து மக்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 6 மணி நேரமாக குறைத்துள்ளார். மேலும் வார பணி நாட்கள் 5 நாட்களிலிருந்து 4 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பிரதமர் சன்னா மரின் “மக்கள் தங்கள் குடும்பத்தோடு அதிக நேரத்தை செலவிட விரும்புகிறார்கள். அதற்கான அவகாசம் கிடைக்கும்போது பணியிலும் குறிப்பிடத்தகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்துவார்கள். மக்கள் தங்கள் விடுமுறை நாட்களில் குடும்பத்தினரோடு சுற்றுலா சென்று வர வேண்டும்” என கூறியுள்ளார்.
பின்லாந்து அருகே உள்ள ஸ்வீடனில் ஏற்கனவே இந்த திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் சன்னா மரினின் இந்த புதிய திட்டம் பின்லாந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.