சீனாவில் மனித தலை கொண்ட மீன் ஒன்று உள்ளதாக இணையதளங்களில் ஒரு வீடியோ வேகமாகப் பரவி வருகிறது.
சீனாவில் உள்ள கிராமம் ஒன்றில் மனித முகம் கொண்ட மீன் ஒன்று உலவுவதாகவும் அது சம்மந்தமான வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 14 வினாடிகள் இருக்கும் அந்த வீடியோவில் மீன் ஒன்று நீந்த அதன் தலை மனிதனை போலவே உள்ளது. அதனால் இந்த வீடியோவை உண்மை என நம்பி பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அந்த வீடியோவை சற்று கவனித்தாலோ அல்லது பாஸ் (நிறுத்தி) பார்த்தாலோ அது மார்பிங் என்பது தெளிவாக தெரிகிறது.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் டீப் பேக் வகை மார்ஃபிங் ஆகும். ஆனால் அதை உண்மை என நம்பி இணையவாசிகள் பலரும் அதைப் பரப்பி வருகிறார்கள்.
https://twitter.com/i/status/1192886685434023938