இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தேவையான உதவிகளுக்கு பிரான்ஸ் ஏற்பாடு செய்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் நாட்டில் கொரோனா நோயாளிகள் பலருக்கு ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கு உதவ பல்வேறு நாடுகள் நேசகரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ள பிரான்ஸ் அதிக கொள்ளளவு கொண்ட 8 ஆக்ஸிஜன் கருவிகள், 28 வெண்டிலேட்டர்களை வழங்க முன்வந்துள்ளது. மேலும் 5 நாட்களுக்கு 2,000 நோயாளிகளுக்கு தேவையான திரவ ஆக்ஸிஜனை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.