பெல்ஜியம் நாட்டில் வசந்த கால ஆண்டு விழாவில் 1000 முட்டைகளை கொண்ட ராட்சத ஆம்லெட் செய்து அனைவரும் பகிர்ந்து உண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெல்ஜியம் நாட்டில் ஆண்டுதோறும் வசந்த கால ஆண்டு விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் மக்கள் ஏதாவது வித்தியாசமாக செய்து கொண்டாடுவர். அதே போன்று இந்த ஆண்டு பெல்ஜியத்தில் உள்ள மால்மேடி கிராம மக்களின் வித்தியமான முயற்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் 1000 முட்டைகள் கொண்ட ராட்சத ஆம்லெட் செய்து அதனை விழாவில் கலந்துக்கொணட அனைவரும் பகிர்ந்து உண்டனர். ராட்சத ஆம்லெட் செய்யும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நன்றி: Mangalam News Network