Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இறந்த காதலன் மூலம் குழந்தை பெற உள்ள காதலி...

இறந்த காதலன் மூலம் குழந்தை பெற உள்ள காதலி...

இறந்த காதலன் மூலம் குழந்தை பெற உள்ள காதலி...
, புதன், 19 அக்டோபர் 2016 (15:08 IST)
விபத்தில் மரணம் அடைந்த தனது காதலனின் உயிரணுக்களை பெற்று கருத்தரிக்கும் உரிமையை நீதிமன்றம் மூலம் பெற்றுள்ளார் ஒரு ஆஸ்திரேலிய பெண்.


 

 
ஆஸ்திரேலியாவின் தெற்கு குவின்ஸ்லாண்டில் உள்ள துவோம்பா எனும் பகுதியில் வசிப்பவர்கள் ஜோஷ்வா டேவிஸ் மற்றும் அய்லா கிரிஸ்வெல். அவர்களும் இருவரும் காதலர்கள். 
 
விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக, கடந்த ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட சாலை விபத்தில் ஜோஷ்வா மரணமடந்தார். எனவே, தன்னுடைய காதலர், அவரின் குழந்தை வடிவத்திலாவது தன்னுடன் இருக்க வேண்டும் என்று கருதினார் அய்லா.
 
ஜோஷ்வா ஒரு ரக்பி விளையாட்டு விரர். அவர் ஏற்கனவே தனது உயிரணுக்களை விந்து வங்கியில் சேமித்து வைத்திருந்தார். எனவே அதன் மூலம் குழந்தை பெற முடிவெடுத்த அய்லா, நீதிமன்றத்தை நாடினார்.

webdunia

 

 
ஜோஷ்வாவின் உயிரணுக்களை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு, அய்லா ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்களும் உறுதிப்படுத்தியதால், நீதிபதிகள் அவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர்.
 
இதைத் தொடர்ந்து, செயற்கை கருத்தரித்தல் மூலம் தனது காதலரின் குழந்தையை தன் வயிற்றில் சுமக்க தயாராகி விட்டார் அய்லா. மேலும், நாங்கள்  மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் அவர் உயிரிழந்து விட்டார். இருப்பினும், அவரின் ஆசையை நான் நிறைவேற்றி விட்டேன்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் அய்லா.
 
வாழ்க காதல்.....

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏவியன் ஃபுளூ வைரஸ் பாதிப்பு: மூடப்பட்டது தேசிய விலங்கியல் பூங்கா