பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேரணியைத் தொடங்கியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் , முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், தேஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவருமாக இருப்பவர் இம்ரான் கான்.
இவரது ஆட்சியின் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது, பிரதமர் சபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில், இன்ற் தன் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பிற கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து உண்மையான சுதந்திரற்கான போராடம் என்ற பெயரில் லாகூரில் உள்ள லிபர்டி சவுக்கிலிருந்து இஸ்லாமா பாத்திற்கு பேரணியைத் தொடங்கினார்.
மேலும், இப்பேரணியின்போது கட்சியினர் இடையே பேசியம் இம்ரான் கான், இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டிப் பேசியதுடன், நாட்டை யார் நிர்வகிக்க வேண்டுமென்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்து, தேர்தலுக்கு இப்போதே காய் நகர்த்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.