Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் வெளியேற ஐ.நா.வில் தீர்மானம்: வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா...

united nation
, வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (08:21 IST)
உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற நேற்று ஐநாவில் தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில் அந்த தீர்மானத்தின் போது இந்தியா வாக்களிப்பை புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளன. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கி ஒரு வருடம் முடிவு பெற்றதை அடுத்து அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார தடை விதித்துள்ளன. மேலும் உக்ரைனுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் பேச்சுவார்த்தை மூலமும் தீர்வு காண வேண்டும் என்றும் உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என ஐநா சபையில் நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 
 
193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐநாவில் 141 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
 
இந்த நிலையில் 7 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்ததாகவும், இந்தியா உள்பட 32 நாடுகள் வாக்களிப்பில் பங்கெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல்நலக்குறைவில் மணமகள்.. மருத்துவமனையில் தாலி கட்டிய மணமகன்..!