அமெரிக்கா - ஈரான் இடையேயான வெளிப்படையான இந்த தாக்குதல் இந்தியா மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஈராக் தலைநகர் பாக்தாத் விமானநிலையத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி மற்றும் துணை ராணுவ தளபதி உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டனர். இது மத்திய கிழக்கு நாடுகளில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என ஈரான், ஈராக் அரசுகளும் வெளிப்படையாகவே அறைகூவல் விடுத்து வருகின்றன.
இதற்கு பதலளிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பதில் தாக்குதல் நடத்தும் விதமாக அமெரிக்கா சொத்துகள் மீது ஈரான் தாக்குதல் நடத்த போவதாக பேசிக் கொண்டிருக்கிறது. அப்படி ஏதாவது செய்ய நினைத்தால் ஈரானின் முக்கியமான 52 இடங்களில் தாக்குதலை நடத்துவோம் என எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான வெளிப்படையான இந்த தாக்குதல் அறைகூவல் உலக நாடுகளிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது தாக்குதல் இந்தியா மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆம், ரான்- அமெரிக்கா போர் பதற்றத்தினால், கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் விலை உஅயர்வால் இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை அதிகரிக்கும் பொழுது அதியாவசிய பொருள்களின் விலையும் அதிகரிக்க கூடும்.
இதனால் பண வீக்கம் அதிகரித்து இந்திய பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக அதிகரித்த வண்ணமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.