இந்தோனேசிய சாலைகளில் ஸ்பைடர் மேன் குப்பையை சேகரித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகிறார்.
இந்தோனேசியாவில் ஆண்டுக்கு உருவாகும் குப்பைகளில் பாதி அளவிலான குப்பை கடலுக்குத்தான் செல்கின்றன. குப்பைகளை முறையாக பராமரிக்க முடியாமல் திணறி வருகிறது அந்நாட்டு அரசு.
இந்நிலையில் இந்தோனேசியாவின் கடற்கரைப் பகுதியான பாரிபாரி பகுதியில் ஸ்பைடர் மேன் குப்பையை சேகரித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகிறார். ஆம், ரூடி ஹார்டோனோ என்பவர் ஸ்பைடர் மேன் வேடமணிந்து குப்பையை சேகரித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இவரை பார்த்து அப்பகுதி மக்களும் தாமாக முன்வந்து குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர் என்பது கூடுதல் தகவல்.