நீச்சல் குளத்தில் குளிப்பதால் பெண்கள் கர்ப்பமடைய வாய்ப்பிருப்பதாக பெண் அதிகாரி பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
இந்தோனேஷியாவின் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் சிட்டி ஹிக்மாவாட்டெ என்ற பெண். இவர் சமீபத்தில் பேசியுள்ள கருத்து சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ள இவர் “ஆண்கள் குளிக்கும் நீச்சல் குளத்தில் பெண்களும் குளித்தால், ஆண்கள் குளிக்கும்போது வெளியான விந்தணுக்கள் பெண்களுக்குள் சென்று அவர்கள் கர்ப்பமாக வாய்ப்பிருக்கிறது” என கூறியுள்ளார்.
அறிவியல்பூர்வமாக நிரூபணமாகாத கருத்து ஒன்றை விஞ்ஞானத்தோடு விபரீதமாய் மோதும் வகையில் பெண் அதிகாரி பேசியிருப்பதாக பலர் சமூக வலைதளங்கள் அவரது கருத்தை கிண்டல் செய்து வருகின்றனர்.