Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

5300 ஆண்டுகளுக்கு முன் ஆல்ப்ஸ் மலைதொடரில் நடந்த கொலை: திடுக்கிடும் தகவல்கள்!!

5300 ஆண்டுகளுக்கு முன் ஆல்ப்ஸ் மலைதொடரில் நடந்த கொலை: திடுக்கிடும் தகவல்கள்!!
, வெள்ளி, 9 ஜூன் 2017 (11:16 IST)
5,300 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன பனிமனிதனின் வழக்கை விசாரணை செய்து வருகிறது இத்தாலி அரசு.


 
 
இத்தாலியின் வடக்கு பகுதியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஒரு பகுதியில் பனிமனிதன் ஓட்ஸியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 
 
அந்த பனிமனிதனின் பின்புறத்தில் ஒரு அம்பு தைத்திருந்தது. அவரது சடலம் பனிக்குள் புதைந்து, பாதுகாப்பாக இருந்தது. உலகில் பழமையான மம்மிகலின் ஒன்றாக ஓட்ஸியின் உடல் கருதப்படுகிறது.
 
1991 ஆம் ஆண்டு ஓட்ஸியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், சடலத்தின் இடது தோளில் அம்பு நுனி இருப்பது பத்து ஆண்டுகள் கழித்து தான் கண்டறியப்பட்டது.
 
இதனால், ஓட்ஸி எப்படி ஏன் கொல்லப்பட்டார் என்ற விசாரணை சமீபத்திய தொடங்கியது. தற்போது இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 25 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளை உதவியாக வைத்து விசாரணை நகர்த்தி செல்லப்படும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மரியாதையா பேசுடா - டிவிட்டரில் எகிறிய ஹெச். ராஜா