ஈராக் அமெரிக்க கூட்டுப்படைகள் மொழூல் நகரை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டுள்ளதை அந்நாட்டு மக்கள் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
ஈராக் நாட்டின் மொசூல் நகரம் கடந்த மூன்று ஆண்டுகளாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்தது. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழித்து கட்ட ஈராக் ராணுவனத்துடன் அமெரிக்க ராணுவம் சேர்ந்து செயல்பட்டது. இந்த கூட்டுப்படை தற்போது மொசூல் நகரை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுள்ளது.
இதை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். பாக்தாத் நகர தெருக்கள் விழாக்கோலமாக மாறியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு மக்கள் கூறியதாவது:-
இந்த வரலாற்று வெற்றியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இந்த வெற்றியினால் நாங்கள் உற்சாகமாக நாடு முழுவதும் கொண்டாடி வருகிறோம். இந்த தருணத்தில் கடவுளுக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். இனியாவது நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்றனர்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் ஈராக் நாட்டில் ஒடுக்கப்பட்டது அந்த அமைப்பினருக்கு பெறும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இருந்துக்கொண்டு உலகம் முழுவதும் தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.