இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையே போர் நடந்து வரும் நிலையில் ஹமாஸின் உச்ச தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடந்த ஓராண்டு காலமாக போர் நடந்து வருகிறது. இதனால் இஸ்ரேல் படைகள் காசா மீது நடத்திய தாக்குதலில் 41 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். அதேசமயம் ஹமாஸ் முக்கிய தலைவர்களை இஸ்ரேல் குறிவைத்து கொன்று வருகிறது.
அவ்வாறாக முன்னதாக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். அதன்பின்னர் ஹமாஸின் தலைமை பொறுப்பை யாஹ்யா சின்வார் ஏற்று நடத்தி வந்த நிலையில் காசாவில் சமீபத்தில் நடந்த தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபரில் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்தான் யாஹ்யா சின்வார். 1980களில் இஸ்ரேலிய ஆதரவாளர்களை கொன்று குவித்த சின்வார் அப்பகுதியில் கான் யூனிஸின் கசாப்புக்கடைக்காரன் என்றே அழைக்கப்பட்டார்.
தற்போது சின்வார் உயிரிழந்துள்ள நிலையில் ஹமாஸின் தலைமை சிதறுவதோடு போரும் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K