உலகம் முழுவதும் ஒமிக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில் இஸ்ரேலில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் மற்றுமொரு திரிபான ஒமிக்ரான் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. பல நாடுகளில் இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டுள்ளன. ஒமிக்ரான் பரவலை ஏற்கனவே செலுத்திய தடுப்பூசிகள் தடுக்குமா என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இஸ்ரேலில் முதல் ஒமிக்ரான் பலி ஏற்பட்டுள்ளது. இறந்த 60 வயது நபர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஒமிக்ரான் உறுதி ஆகியிருந்தாலும், அவருக்கு இணை நோய்களும் இருந்ததால் ஒமிக்ரானால் இறந்தார் என உறுதியாக சொல்ல முடியாது என இஸ்ரேல் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுவரை இஸ்ரேலில் 200 பேருக்கு ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது.