சீன தேசத்தின், ஆன் லைன் வர்த்தகச் சக்ரவர்த்தி என்று புகழப்படும், அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜேக் மா, தலைமைப் பதவிலிருந்து விலகப் போவதாகத் தகவல் வெளியாகிறது.
கடந்த 90 களின் இறுதியில் ஒரு ஆங்கில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஜாக் மா, தன் நண்பர்களுடன் இணைந்து, அலிபாபா நிறுவனத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் இவரது நண்பர்கள் இவரை விட்டு ஓடினாலும் தம் உறுதியில் விடாப்பிடியாய் நின்று, இன்று ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற பெயரையும், சீனாவில் ஆன்லைன் வர்த்தகத்தின் ராஜாவாகவும் திகழ்கிறார். சீன நாட்டில் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருபருபவரும் ஜாக்மா தான்.
இந்நிலையில், அலிபாபா நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஜாக்மா, விரைவில் அப்பதவிலிருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியாகிறது. மேலும், ஜாக்மாவுக்குப் பின், மாவென் டேனியல் ஸெங் அப்பதவியை ஏற்பார் என்று தெரிகிறது. இருப்பினும், அலிபாபா குழுமத்தில் 5.3 % பங்குகளைக் கொண்டுள்ள ஜாக்மா, இந்நிறுவனத்தின் முக்கிய முடிவுகளில் பங்கேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகிறது.