இந்தியா கனடா இடையே கடந்த சில நாட்களாக மோதல் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க மண்ணில் வைத்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கனடா மீது கடுமையான விமர்சனத்தை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் காலிஸ்தான் போராட்டம் என்பது அவர்கள் சுதந்திரம், அவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதி தர வேண்டும் என்று கனடா பிரதமர் பேசி இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இந்தியா உள்பட ஆசிய நாடுகள் வளர்வதை அவர்கள் விரும்பவில்லை என்பதை இந்த பேச்சு காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.
மேற்குலக நாடுகள் பல விஷயங்களில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்து வருகிறது என்று பேசிய ஜெய்சங்கர் அமெரிக்காவையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
அமைச்சர் ஜெய்சங்கரின் இந்த பேச்சை கனடா மற்றும் அமெரிக்கா எதிர்பார்க்காத நிலையில் உலக தலைவர்கள் இந்தியாவை ஆச்சரியமாக பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.