ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.
இதுவரை பூமியில் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கிகளிலேயே மிகவும் பெரிய தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.
இது தமது சுற்றுவட்டப் பாதையை அடைந்த பின்பு அதன் ஏவல் வெற்றிகரமாக நடந்ததைக் காட்டும் சமிக்கள் கென்யாவில் உள்ள ஆண்டனா ஒன்றால் பெறப்பட்டது. ஏவப்பட்ட பின்னர் அரைமணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் ஜேம்ஸ் வெப் பூமிக்கு இந்த சமிக்ஞையை அனுப்பியது.
பிரெஞ்சு கயானாவில் உள்ள கோவ்ரு விண்வெளி நிலையத்திலிருந்து 'அரியேன்' செயற்கைக்கோள் ஏவல் நிறுவனத்தின் ராக்கெட் ஒன்றின் மூலம் ஜேம்ஸ் வெப் ஏவப்பட்டது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணில் ஏவப்படும் காட்சியை வெளியிட்டுள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, இந்தத் தொலைநோக்கி விண்ணில் இப்போது பாதுகாப்பாக உள்ளது என்று கூறியுள்ளது.
பிரபஞ்சத்தில் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது? பிறகு, உயிர்கள் எப்படி உருவாகின? என்பன போன்ற ரகசியங்களைத் தேடுவதற்காக, ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி ஏவப்பட்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விண்வெளி அதிகாரிகள் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளனர்.