ஜப்பானின் யமகட்டா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உண்டாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
ஜப்பானில் உள்ள யமாகாட்டா மாகானத்தில் ரிக்டர் 6.5 அளவிற்கு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் யமகாட்டா, நிகாட்டா மற்றும் இஷிகாவா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.
கடந்த 2011ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. 2004க்கு பிறகு ஏற்பட்ட அந்த சுனாமியில் சிக்கி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது அங்கு மீண்டும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.