சீனாவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரில் தங்கள் அதிகாரிகள் பங்கேற்க மாட்டார்கள் என ஜப்பான் அறிவித்துள்ளது.
குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடர் அடுத்த ஆண்டில் சீனாவில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் உலக நாடுகளை சேர்ந்த வீரர்கள் பலரும் பங்கேற்பது மட்டுமல்லாது உலக நாட்டு அமைச்சர்கள், அரசியல் தலைவர்களும் பார்வையாளராக இடம்பெறுவது வழக்கம். ஆனால் சீனாவில் உய்குர் இன இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக குற்றச்சாட்டை வைத்து அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்கள் அதிகாரிகள் கலந்துகொள்ள மாட்டார்கள் என அறிவித்துள்ளன.
இந்நிலையில் இதே காரணத்தைக் கூறி இப்போது ஜப்பானும் தங்கள் அதிகாரிகள் குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று அறிவித்துள்ளது.